உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வரும் 7ம் தேதி கூடுகிறது கோவை மாநகர மன்றம்

வரும் 7ம் தேதி கூடுகிறது கோவை மாநகர மன்றம்

கோவை; கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம், 7ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை, 10:30 மணிக்கு, மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற இருப்பதாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.முதல் கட்டமாக, 17 தீர்மானப் பொருட்கள், கவுன்சிலர்களின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இரண்டாவது செட் தீர்மானங்கள் அனுப்புவதற்கான ஏற்பாடுகள், மாநகராட்சி அலுவலகத்தில் நடந்து வருகின்றன.கடந்தாண்டு டிச., 30ம் தேதி, மாமன்ற கூட்டம் நடந்தபோது, மேயர் இருக்கைக்கு முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட, அ.தி.மு.க., மாமன்ற கவுன்சில் குழு தலைவர் பிரபாகரன், இரு கூட்டங்களுக்கு 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அவ்வழக்கில் மாநகராட்சி தரப்பு விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது; நாளை (5ம் தேதி) இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.மாநகராட்சி தரப்பில் அளிக்கும் விளக்கம் மற்றும் கோர்ட் விசாரணை முடிவுக்கு ஏற்ப, மாமன்ற கூட்டத்தில், அ.தி.மு.க., கவுன்சிலர் பிரபாகரன் பங்கேற்பாரா என்பது தெரியவரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !