உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தங்கக் கட்டி மோசடி பட்டறை உரிமையாளர் மீது கோவை போலீஸ் வழக்கு

தங்கக் கட்டி மோசடி பட்டறை உரிமையாளர் மீது கோவை போலீஸ் வழக்கு

கோவை:நகை செய்து தருவதாக,16 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 141 கிராம் தங்கக்கட்டியை பெற்று, திருப்பித் தராமல் மோசடி செய்ததாக அளித்த புகாரை போலீசார் விசாரிக்கின்றனர். கோவை, ராஜ வீதியை சேர்ந்தவர் லட்சுமி நரசிம்மராஜா அர்ஷ், 46. இவர், அதே பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். கெம்பட்டி காலனி, பாளையம் தோட்டத்தைச் சேர்ந்த மனோகரன், 40, என்பவர் லட்சுமி நரசிம்மராஜாவிடம், சில மாதத்துக்கு முன் அறிமுகமானார். அப்போது, தான் தங்க நகைப் பட்டறை நடத்தி வருவதாக, மனோகரன் கூறியுள்ளார். அதையடுத்து, அவரிடம், 141 கிராம் தங்கக்கட்டிகளை கொடுத்து நகை செய்து தருமாறு, லட்சுமி நரசிம்மராஜா அர்ஷ் கேட்டுக் கொண்டார். ஆனால், தங்கக்கட்டிகளை பெற்ற மனோகரன், ஒன்பது மாதங்களாக நகை செய்து தராமலும், தங்கக்கட்டிகளை திருப்பிக் கொடுக்காமலும் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. அந்த தங்க கட்டிகளின் மதிப்பு, 16 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் மீது லட்சுமி நரசிம்மராஜா அர்ஷ் அளித்த புகாரின் படி, கோவை பெரிய கடை வீதி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை