மேலும் செய்திகள்
பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் ஊக்கத் தொகை
12-Jan-2025
கோவை; பொங்கல் விழாவை முன்னிட்டு, கோவை மத்திய சிறையில் நடந்த இசை நிகழ்ச்சியை, சிறைக்கைதிகள் மெய்மறந்து ரசித்தனர்.கோவை தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், பொங்கல் விழாவை கொண்டாடும் வகையில், கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்காக இசை நிகழ்ச்சி நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.நிகழ்ச்சியில், சென்னை 'மவுன ராகம்' முரளியின் இசை குழுவினர் பங்கேற்று, எஸ்.பி.பி.,யின் சூப்பர் ஹிட் பாடல்களை, தத்ரூபமாக பாடி அசத்தினர்.இசை நிகழ்ச்சியை, ஐநூறுக்கும் மேற்பட்ட கைதிகள் அரங்கிலும், இரண்டாயிரம் கைதிகள் அவரவர் சிறைகளில் இருந்தபடியே மெய்நிகர் வாயிலாகவும், பார்த்து ரசித்தனர்.கோவை தங்க நகை உற்பத்தியாளர் சங்கத்தினர் கூறுகையில், 'மவுனராகம் முரளியின் இசை நிகழ்ச்சி, மிகவும் சிறப்பாக அமைந்தது. எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பாடல்களை, தத்ரூபமாக பாடி அனைவரின் பாராட்டையும் பெற்றார்' என்றனர்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சிறைக்கைதிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதில், சிறைவாசிகளுக்காக ஐந்து தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில், கோவை தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர்முத்து வெங்கட்ராம், செயலாளர் சுரேஷ்குமார், பொருளாளர் வெங்கடேஷ், ஆலோசகர் தேவபிரகாஷ், மத்திய சிறை டி.ஐ.ஜி., சண்முக சுந்தரம், சிறை எஸ்.பி., செந்தில் குமார், ஜெயிலர் சரவணகுமார், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அருண் பிரசாத் ஆகியோர் பங்கேற்றனர்.
12-Jan-2025