உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிய அளவிலான போல் வால்ட் போட்டிக்கு கோவை மாணவி தகுதி

தேசிய அளவிலான போல் வால்ட் போட்டிக்கு கோவை மாணவி தகுதி

கோவை: தேசிய அளவிலான 'போல் வால்ட்' போட்டிக்கு தகுதி பெற்ற மாணவியை சுகுணா ரிப் வி பள்ளி நிர்வாகிகள், ஆசி ரியர்கள் நேற்று பாராட்டினர்.மாவட்ட அளவிலான கம்பு ஊன்றி தாவும் 'போல் வால்ட்' போட்டியில் முதலிடம் பிடித்த, சுகுணா ரிப் வி பள்ளி மாணவி அஸ்வினி, ஈரோட்டில் சமீபத்தில் நடந்த மாநில அளவிலான தடகள போட்டி யிலும் தங்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார்.தொடர்ந்து, வரும், 26ம் தேதி லக்னோவில் நடக்கும் தேசிய அளவிலான போட்டிக்கு இவர் தகுதி பெற்றுள்ளார். இந்நிலையில், பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் சார்பில் நேற்று பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. பள்ளி தலைவர் லட்சுமி நாராயணசாமி, தாளாளர் சுகுணா, முதல்வர் அந்தோணி ராஜ் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவியை பாராட்டி, தேசிய அளவிலான போட்டியில் வெற்றிபெற வாழ்த்தினர்.மாணவி அஸ்வினி கூறுகையில்,''கடந்த மூன்று வருடங்களாக 'போல் வால்ட்' போட்டியில் பங்கேற்று வருகிறேன். கடும் முயற்சிக்கு மத்தியில் வெற்றி பெற்றுள்ளேன். பெற்றோர், ஆசிரியர்கள் ஒத்துழைப்பும், ஊக்குவிக்கும் காரணமாக இந்த அளவுக்கு சாதிக்க முடிந்தது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி