உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தேசிய அளவிலான நீச்சல் போட்டி : கோவை மாணவன் தேர்வு

 தேசிய அளவிலான நீச்சல் போட்டி : கோவை மாணவன் தேர்வு

கோவை: டில்லியில் நடக்கும் தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவனுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்திய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான, நீச்சல் தேர்வு போட்டி, பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்., விளையாட்டு அரங்கில் நடந்தது. கோவை மாவட்டத்தை சேர்ந்த சாய் வித்யா நிகேதன் பதின்ம மேல்நிலைப் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவன் மோனிஷ் நாயுடு தேர்வு செய்யப்பட்டார். இதனால், இந்திய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் டில்லியில் வரும் 29ம் தேதி நடக்கும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்றுமுன்தினம், அமிர்த் விஷ்வ வித்யா பீடத்தில் நடந்த கோவை வருவாய் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று, சென்னையில் நடக்கவுள்ள மாநில அளவிலான நீச்சல் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாணவனை, பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி