மேலும் செய்திகள்
கோவை விழா போட்டி; கற்பகம் --- கே.சி.டி., ஜோர்
03-Dec-2024
அன்னுார் : மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில், கோவை அணி கோப்பையை வென்றது.அன்னுார் அருகே ராம்நகர், வடக்கலூர், புள்ளாமடை ஆகிய மூன்று இடங்களில் கடந்த இரு வாரங்களாக மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் அன்னுார், கருமத்தம்பட்டி, மேட்டுப்பாளையம் மற்றும் கோவையை சேர்ந்த 18 அணிகள் பங்கேற்றன.இறுதிப் போட்டியில் கோவை இணைந்த கரங்கள் அணியும், வளைய பாளையம் வி.சி.சி., அணியும் மோதின.இதில் கோவை அணி முதல் இடம் பெற்று, 10 ஆயிரம் ரூபாய் மற்றும் கோப்பையை கைப்பற்றியது. வி.சி.சி., அணி இரண்டாம் இடம் பெற்று 7,000 ரூபாய் மற்றும் கோப்பையை வென்றது.அன்னுார் ராம்நகர் அணி, மூன்றாம் இடத்தைப் பிடித்து 5,000 ரூபாய் மற்றும் கோப்பையை வென்றது. நான்காம் இடத்தை கருகம்பாளையம் ரெட் பாக்ஸ் அணி, 3000 ரூபாய் மற்றும் கோப்பையுடன் வென்றது.இதில் சிறந்த பேட்ஸ்மேன் விருது இணைந்த கரங்கள் அணியின் சச்சுவுக்கும், சிறந்த பவுலர் விருது வி.சி.சி., அணியின் ராஜேசுக்கும், ஆட்டநாயகன் விருது கோவை சம்பத்துக்கும் வழங்கப்பட்டது.பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்கினார். தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் ரவி, தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் தனபாலன் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
03-Dec-2024