உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முதல்வர் கோப்பை கோ-கோ போட்டியில் கோவை டாப்

முதல்வர் கோப்பை கோ-கோ போட்டியில் கோவை டாப்

கோவை; மாநில அளவிலான முதல்வர் கோப்பை கோ-கோ போட்டிகள் கற்பகம் பல்கலையில் நான்கு நாட்கள் நடந்தது. மாணவர்களுக்கான இப்போட்டியில், 38 மாவட்ட அணிகள் பங்கேற்றன. பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த காலிறுதி போட்டிகளில், கோவை அணி, 18-8 என்ற புள்ளி கணக்கில் திருப்பூர் அணியை தோற்கடித்தது. சிவகங்கை அணி, 12-9 என்ற புள்ளிகள் அடிப்படையில் மதுரை அணியையும், ஈரோடு அணி, 17-11 என்ற புள்ளிகளில் கன்னியாகுமரி அணியையும், சென்னை அணி, 14-10 என்ற புள்ளிகளில் திருநெல்வேலி அணியையும் வென்றன. 'சூப்பர் லீக்' சுற்றுக்குள் கோவை, சிவகங்கை, சென்னை, ஈரோடு ஆகிய நான்கு அணிகள் நுழைந்தன. போட்டிகளின் நிறைவில், கோவை அணி தங்க பதக்கமும், சிவகங்கை அணி வெள்ளி பதக்கமும், சென்னை அணி வெண்கல பதக்கமும் வென்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் பரிசுகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை