மேலும் செய்திகள்
சிலம்பம் போட்டியில் காஞ்சிக்கு 28 பதக்கங்கள்
15-Oct-2025
கோவை: காரைக்காலில் சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. இந்தியா, ஜப்பான், மலேசியா, குவைத் ஆகிய நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். கோவை மாவட்டத்தை சேர்ந்த, 13 மாணவ, மாணவியர், மாஸ்டர் ஜெயநாத் தலைமையில் பங்கேற்றனர். இதில், மாணவர் கவின்(3), நிவின் ஜோயல்(4), கெவின்(5), தேன்கொடிலா(5), துரு சாஸ்விக்(7), யுகன்(8), ஹாசினி(8), சபரி கிரிஷ்(10), திலகன் (13), கதிர்வேல்(14), வத்திஸ்மன் (14) மற்றும் சர்ஜுன் சேது வினியார்டு(17) ஆகியோர், பல்வேறு வயதுக்குட்பட்ட பிரிவுகளில் பங்கேற்றனர். மாணவ, மாணவிகள் தங்களது திறமையை வெளிப்படுத்தி, 18 தங்கம், ஐந்து வெள்ளி, மூன்று வெண்கலம் என, 26 பதக்கங்களை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, சான்றிதழ்கள் பரிசாக வழங்கப்பட்டன.
15-Oct-2025