மேலும் செய்திகள்
ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம்
29-Mar-2025
அன்னுார் : 'விநியோகிக்கப்படாத போர்வெல் நீருக்கு வரி வசூலிக்கப்படுகிறது,' என, பா.ஜ., புகார் தெரிவித்துள்ளது. கஞ்சப்பள்ளி பா.ஜ., சக்தி கேந்திர பொறுப்பாளர் பிரபாவதி தலைமையில், பா.ஜ.,வினர் நேற்று அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அளித்த மனுவில், 'கஞ்சப்பள்ளி ஊராட்சியில், கடந்த சில ஆண்டுகளாக போர்வெல் நீர் சப்ளை செய்யப்படவில்லை. இதுகுறித்து பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால் விநியோகிக்காத போர்வெல் நீருக்கு கட்டணம் செலுத்தும்படி சில வாரங்களாக எச்சரிக்கின்றனர். வற்புறுத்துகின்றனர். இதை ஊராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும். தட்டுப்பாடு இல்லாமல் ஆற்று நீர் மற்றும் போர்வெல் நீர் அனைத்து வீடுகளுக்கும் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலர் ரவீந்திரன், 'உடனே அங்கு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என உறுதி அளித்தார்.இதையடுத்து பா.ஜ.,வினர் கலைந்து சென்றனர். இதில் பா.ஜ., வட்டார தலைவர் ஆனந்தன், மாவட்ட நிர்வாகிகள் தர்மலிங்கம், சிவக்குமார், ஒன்றிய பொருளாளர் அசோக் உள்பட பலர் பங்கேற்றனர்.
29-Mar-2025