மேலும் செய்திகள்
மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
31-Mar-2025
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு வட்டாரத்தில், அரசு அலுவலகங்களில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் நேற்று ஆய்வு செய்தார்.இதில், தாலுகா அலுவலகம் மற்றும் ஒன்றிய அலுவலகம் ஆய்வு மற்றும் பிரச்னைகள், பணிகள் குறித்து கேட்டறிந்தார்.மேலும், வேளாண் அலுவலகத்தில் இருப்பு வைத்துள்ள விதைகளை ஆய்வு செய்தார். அதன் தரம் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார்.அதன்பின், நல்லட்டிபாளையம் அரசு சுகாதார நிலையத்தில், நடக்கும் புதிய ஆய்வக கட்டட கட்டுமான பணியை பார்வையிட்டார். பட்டணம் கிராமத்தில் உள்ள தொகுப்பு வீடுகள் எண்ணிக்கை மற்றும் திட்டம் குறித்து கேட்டறிந்தார். மற்றும் தொகுப்பு வீடுகள் நிலையை ஆய்வு செய்தார்.'கிணத்துக்கடவு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள சோளம் உள்ளிட்ட பொருட்களின் தரங்கள் மற்றும் கிடங்குகள் நிலை குறித்து பார்வையிட்டார். கிணத்துக்கடவு, தேரோடும் வீதியில் உள்ள ரேஷன் கடையை பார்வையிட்டு, அங்குள்ள பொருட்கள் விபரங்களை அறிந்தார்.கிணத்துக்கடவு அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் அன்வர்அலி, மாவட்ட கலெக்டரிடம் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.தொடர்ந்து, கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்தார்.
31-Mar-2025