உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இனி கனிம வளம் கொள்ளை போகாது: தடுத்து நிறுத்த கலெக்டர் பவன்குமார் உறுதி

இனி கனிம வளம் கொள்ளை போகாது: தடுத்து நிறுத்த கலெக்டர் பவன்குமார் உறுதி

கோவை; கோவையில் 'எஞ்சியிருக்கும் இயற்கை வளங்களையாவது, அடுத்த சந்ததிக்கு விட்டு வையுங்கள்' என்று, செங்கல் சூளைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று,இயற்கையையும் சூழலையும் பாதுகாப்போம் உறுதியுடன் இருங்கள் என்று, நம்பிக்கை கொடுத்திருக்கிறார், புதிய கலெக்டர் பவன்குமார்.கோவையிலுள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியிலுள்ள ஆனைகட்டி, தடாகம், சோமையம்பாளையம், ஆலாந்துறை, நாதேகவுண்டன்புதுார், தென்கரை, செம்மேடு, பகுதிகளில் இயங்கி வந்த செங்கல் சூளைகளால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது.சூழல் மாசடைந்து, விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் பேராபத்து ஏற்பட்டது. சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த செங்கல் சூளைகள், கனிம வளக்கொள்ளை, காற்றுமாசு, கனரக வாகனங்களால் ஏற்படும் சாலை விபத்துக்கள், மனித--வனவிலங்கு மோதல்கள் என பலபிரச்னைகள் இப்பகுதியில் நிலவின.பலரும் சொந்த நிலங்களை விற்று, வெவ்வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர். செங்கல் சூளைகளுக்கு எதிராக, சட்டப்போராட்டங்களை மேற்கொண்டனர், தடாகம் சட்ட போராட்ட பாதுகாப்பு குழுவினர்.இதையடுத்து, உற்பத்தி நிறுத்தம் செய்ய கோர்ட் உத்தரவிட்டது. அப்போதும் சட்டவிரோத செங்கல் உற்பத்தி நடந்து வந்தது. லாரிகளில் வெளிப்படையாகவே விற்பனை செய்யப்பட்டது. இதற்கு ஆளும் கட்சியும், அப்போதைய மாவட்ட நிர்வாகமும் பச்சைக்கொடி காட்டியது.இதையடுத்து ஐகோர்ட், நீதிபதிகள் அடங்கிய ஒரு சிறப்புக்குழுவை, கோவைக்கு அனுப்பி உண்மை நிலையை கண்டறியும் குழுவை அனுப்பியது. அக்குழுவினர் மாவட்ட நிர்வாகத்துடன் கள ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது செங்கல் உற்பத்தி நடந்து வந்ததும், அதை லாரிகளில் கொண்டு சென்று விற்பனை செய்ததும் உறுதிசெய்யப்பட்டது.இது மாவட்டநிர்வாகம், வருவாய்த்துறை, போலீசார், கனிமவளத்துறை என்று அரசின் பல்வேறு துறைகளுக்கும் கரும்புள்ளியாக மாறியது. கலெக்டர் மாற்றப்பட்டார்.மீண்டும் விசாரணை மேற்கொள்ள, சிறப்பு புலனாய்வு குழுவை கோர்ட் நியமித்தது. அக்குழு வேகமாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இச்சூழலில், புதிய கலெக்டர் பவன் குமார் கடந்த 12ம் தேதி பொறுப்பேற்றார். கனிமவளத்றை, போலீஸ், வருவாய்த்துறை அதிகாரிகளை அழைத்து கோர்ட் உத்தரவை கடுமையாக பின்பற்ற உத்தரவிட்டுள்ளார்.கோவையில், 'எஞ்சியிருக்கும் இயற்கை வளங்களையாவது அடுத்த சந்ததிக்கு விட்டு வையுங்கள்' என்று செங்கல் சூளைகளால் பாதிக்கப்பட்ட தடாகம் மக்களின், கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.இயற்கையையும், சூழலையும் பாதுகாப்போம்; உறுதியுடன் இருங்கள் என்று, அம்மக்களிடம் நம்பிக்கையை கொடுத்திருக்கிறார், புதிய கலெக்டர் பவன்குமார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை