உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஏற்றுமதியை அதிகரிக்க கலெக்டர் வலியுறுத்தல்

ஏற்றுமதியை அதிகரிக்க கலெக்டர் வலியுறுத்தல்

கோவை: கோவை மாவட்ட ஏற்றுமதி வழிகாட்டு குழு சார்பில், வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியை அதிக ரிப்பது குறித்து, கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.கோவை மாவட்டத்தில், 2,46,000 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. மாவட் டத்தில் விவசாய உற்பத்தி பங்களிப்பு 41.42 சதவீதம் ஆகவும், தொழில் உற்பத்தி 55.14 சதவீதமாகவும், இதர துறைகளின் உற்பத்தி 3.44 சதவீதமாகவும் உள்ளது. மாவட்டத்தின் மொத்த உற்பத்தி ரூ.64,681 கோடி.இந்நிலையில், கோவை மாவட்ட ஏற்றுமதி வழி காட்டு குழு சார்பில், ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.இதில், கலெக்டர் கிராந்திகுமார் தலைமை வகித்து பேசுகையில், ''ஏற்றுமதியை மேலும் அதிகரிக்க, தொழில் முனைவோர் கவனம் செலுத்த வேண்டும். தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தரும்,'' என்றார்.அப்போது தொழில்முனைவோர், 'கோவையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். விமானநிலைய விரிவாக்கப்பணிக்கான நடவடிக்கைகளை துவங்க வேண்டும்.மோட்டார் பம்புக்கான ஜி.எஸ்.டி.,யை, 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும். தங்கநகை தொழில் பூங்கா அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். உணவு பொருட்கள் குளிர்பதப்படுத்தும் மையங்களை அமைக்க வேண்டும்' என வேண்டுகோள் விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை