உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திருநங்கைகளுக்கு கலெக்டர் வாக்குறுதி

திருநங்கைகளுக்கு கலெக்டர் வாக்குறுதி

கோவை; கோவை கலெக்டர் அலுவலகத்தில், சமூக நலத்துறை சார்பில் திருநங்கைகளுக்கான, குறைதீர் முகாம் கலெக்டர் தலைமையில் நடந்தது. இதில் கலெக்டர் பேசுகையில், ''திருநங்கைகளுக்கான அடையாள அட்டை வழங்குவதன் வாயிலாக, அரசின் திட்டங்களில் எளிதில் பயனடையலாம். திருநங்கைகள் சுய தொழில் மேற்கொண்டு, தொழில் முனைவோர்களாக வர வேண்டும். தொழில் துவங்கவும் கடனுதவி கிடைக்கவும், மாவட்ட நிர்வாகம் உதவும்,'' என்றார்.முகாமில், மாவட்ட சமூக நல அலுவலர், திருநங்கைகளின் பிரதிநிதிகள், திருநங்கையர் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி