உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல்லுாரி கனவு நிகழ்ச்சி; 700 மாணவர்கள் பங்கேற்பு

கல்லுாரி கனவு நிகழ்ச்சி; 700 மாணவர்கள் பங்கேற்பு

மேட்டுப்பாளையம்; காரமடையில் நேற்று கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெற்றது.கோவை மாவட்டம் காரமடையில் உள்ள ஆர்.வி. கலை, அறிவியல் கல்லூரியில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் தொடர்பான கல்லூரி கனவு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, கோவை வடக்கு கோட்டாட்சியர் கோவிந்தன், மேட்டுப்பாளையம் தாசில்தார் ராம்ராஜ், கல்லூரி கனவு ஒருங்கிணைப்பாளர் சுபாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு உயர்கல்வி பயில்வதற்கான வழிகாட்டுத் தொடர்பான வழிகாட்டு கையேட்டினை வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளை சேர்ந்த வல்லுனர்கள் மாணவர்களுக்கு பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல் படிப்புகள் சார்ந்த விவரங்களை வழங்கினர். கல்வி கடன் சார்ந்த விவரங்களையும், விருப்பமான கல்லூரியையும், பாடப் பிரிவையும் தேர்ந்தெடுப்பது எவ்வாறு, வேலை வாய்ப்பு, போட்டி தேர்வு குறித்த விவரங்களையும் அளித்தனர். இதில் 700 மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை