உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இன்டர்ன்ஷிப் கிடைக்காததால் கல்லுாரி மாணவி தற்கொலை

இன்டர்ன்ஷிப் கிடைக்காததால் கல்லுாரி மாணவி தற்கொலை

கோவை; 'இன்டர்ன்ஷிப்' எனப்படும் தொழில் பயிற்சிக்கு, தேர்வாகாததால் கல்லுாரி மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சின்னவேடம்பட்டி, அத்திப்பாளையம் பிரிவை சேர்ந்தவர் டேவிட், 54. மகள் செரினா, 20. இவர் சிட்ரா அருகில் உள்ள தனியார் கல்லுாரியில், 4ம் ஆண்டு 'சாப்ட்வேர் சிஸ்டம்' படித்து வந்தார். இந்நிலையில், 'இன்டர்ன்ஷிப்' செல்வதற்காக செரீனா வகுப்பில் இருந்த மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவரது நண்பர்கள் அனைவருக்கும் 'இன்டர்ன்ஷிப்' வாய்ப்பு கிடைத்து, செரீனாவுக்கு கிடைக்காததால், மன வேதனை அடைந்தார்.கடந்த 9ம் தேதி வீட்டில் இருந்த செரினா, வாழ்க்கையில் விரக்தி அடைந்து துாக்கிட்டு கொண்டார். பெற்றோர் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ