உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

கோவை, : உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை சார்பில், விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நேற்று நடந்தது.கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவில் முன் துவங்கிய பேரணி, ரேஸ்கோர்ஸ் சுற்றுவட்டப்பாதை வழியாக மீண்டும் சாரதாம்பாள் கோவிலில் நிறைவடைந்தது. புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்கள் 'மைம்' நிகழ்ச்சியின் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது.பேரணியை எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர், ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர். எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அலுவலர் ராம்குமார், தலைமை நிர்வாக அலுவலர் மகேஷ் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை