கூட்டு மருந்து தொழு நோயை முழுவதும் குணப்படுத்தும்
அன்னுார்; 'கூட்டு மருந்து தொழு நோயை முழுவதும் குணப்படுத்தும்,' என, விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அதிகாரிகள் தெரிவித்தனர். அன்னுார் அரசு மருத்துவமனை, பொகலுார், மூக்கனூர், செம்மாணி செட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் தேவசேனா தலைமை வகித்தார்.மருத்துவம் சாரா வட்டார மேற்பார்வையாளர் கோவிந்தசாமி பேசுகையில், ''ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் தொடர்ந்து கூட்டு மருந்து சிகிச்சை பெற்றால் தொழு நோயை முழுவதும் குணப்படுத்தலாம். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை இலவசம். உணர்ச்சியற்ற தேமல் அல்லது படை இருந்தால் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.நிகழ்ச்சியில், தொழுநோய் ஒழிப்பு குறித்த உறுதி மொழியை மருத்துவ அலுவலர்கள் வாசிக்க, பொதுமக்கள் ஏற்றனர். இதில் டாக்டர் சக்திவேல், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் சிவக்குமார், செந்தில் குமார் மற்றும் செவிலியர்கள் பங்கேற்றனர்.