உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிய திறனாய்வு தேர்வு மாணவர்களுக்கு பாராட்டு

தேசிய திறனாய்வு தேர்வு மாணவர்களுக்கு பாராட்டு

சூலுார், ; தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மத்திய அரசு நடந்தும் தேசிய திறனாய்வு தேர்வில், சூலுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், வெற்றிவேல், சபரிநாதன், ஸ்ரீ வசீகரன் ஆகியோர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, ஊக்கத்தொகையாக, மாதம், 1000 ரூபாய் வீதம், நான்கு ஆண்டுகளுக்கு வங்கி கணக்கில் செலுத்தப்படும்.வெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளி தலைமையாசிரியை ஜெயசீலி மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் நித்யா, பிரதிநிதிகள் கருணாநிதி, தங்கமணி ஆகியோர் பாராட்டினர்.மாணவர்களுக்கு பயிற்சி அளித்த, கோவிந்த், உதயகுமார், கவுதம், ஆசிரியை கிருஷ்ணம்மாள் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை