சமுதாய நலக்கூடம் காணொலியில் திறப்பு
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, கோதவாடியில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். கிணத்துக்கடவு, கோதவாடி ஊராட்சி ஆதிதிராவிடர் காலனியில், தாட்கோ வாயிலாக, 77 லட்சத்து, 89 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டுமான பணி கடந்த ஜனவரி மாதம் துவங்கியது. இப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, நேற்று முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில், கிணத்துக்கடவு வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், கோதவாடி முன்னாள் ஊராட்சி தலைவர் ரத்தினசாமி, தாட்கோ உதவி செயற்பொறியாளர் வினோதினி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.