அம்மனுக்கு சார்த்திய சேலை வாங்க போட்டி!
கோவை ;தண்டுமாரியம்மன் கோவில் சித்திரைத்திருவிழா, கோலாகலமாக நடந்து வரும் சூழலில், அம்மனுக்கு ஓராண்டுகளாக சார்த்தப்பட்ட புத்தம்புது சேலைகள் நேற்று ஏலமிடப்பட்டன.கோவில் மஹாமண்டபத்தில், அம்மனுக்கு சார்த்திய சேலைகளை வரிசையாக அடுக்கி வைத்திருந்தனர். ஒவ்வொரு சேலையும், 100 ரூபாயில் துவங்கி அதிக பட்சம் 5,000 ரூபாய் வரை ஏலம் போனது. சில சேலைகள், 100, 200, 500 என்று குறைந்த விலைக்கும் ஏலம் போனது.சேலையின் தரம் எப்படி இருந்தாலும், அம்மனுக்கு சார்த்திய சேலை என்பதால், சில சேலைகளை அதிகபட்ச தொகை கொடுத்து ஏலத்தில் எடுக்கவும், பக்தர்கள் முன் வந்தனர். ஒரு சேலை, ரூ.5 ஆயிரத்துக்கு ஏலம் போனது.