உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  படைப்பாற்றலை துாண்டும் போட்டிகள்

 படைப்பாற்றலை துாண்டும் போட்டிகள்

கோவை: டாக்டர் என்.ஜி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் இயற்பியல் துறை மற்றும் ராபிட் பியூச்சர் டெக்னாலஜி இணைந்து, 'ஸ்ட்ரீம் மைன்ட்ஸ் 2030' என்ற தலைப்பில், பள்ளிகளுக்கிடையேயான சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. அமிர்தா இன்க்யூபேட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி உமா மகேஸ்வரி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பள்ளி மாணவர்களிடையே படைப்பாற்றல், அறிவியல் ஆர்வம் மற்றும் தொழில்நுட்ப திறன்களை துாண்டும் வகையில் போட்டிகள் நடந்தன. கணினி, கணிதம், பொறியியல், அறிவியல் துறைகளை ஒருங்கிணைத்து, 3டி பென் ஆர்டிஸ்ட், நெக்ஸ்ட் - ஜென்இனோவேட்டர்ஸ், நேச்சர்நிஞ்சா போன்ற பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடந்தன. சிறப்பான திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர். டாக்டர் என்.ஜி.பி.,கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் சரவணன், அகாடமிக் டீன் ராமமூர்த்தி, துறைத் தலைவர் கிரிஜா மற்றும் ராபிட் பியூச்சர் டெக்னாலஜி இயக்குனர்கள் ஜெயக்குமார், பிரவீன்குமார், தியாகராஜூ பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை