உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ.12 கோடி மோசடி நிதி நிறுவனம் மீது புகார்

ரூ.12 கோடி மோசடி நிதி நிறுவனம் மீது புகார்

கோவை:தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் லீடர் மேத்யூ, 35. இவரும், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வினோத் குமாரும் சேர்ந்து, கோவை நவ இந்தியா பகுதியில், 'புளூ டைமண்ட் கேபிட்டல்' என்ற நிறுவனத்தை துவக்கினர்.தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால், மாதம் 9 சதவீதம் வட்டி தருவதாக விளம்பரப்படுத்தினர். பல்வேறு பகுதியை சேர்ந்த மக்கள், அந்நிறுவன ஊழியர்களும், 1 கோடி ரூபாய் வரை முதலீடு செய்தனர்.நான்கு ஆண்டுகளாக முதலீடு செய்தவர்களுக்கு வட்டி பணத்தை முறையாக கொடுத்தனர். நாளடைவில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மொத்தம், 560 பேர், 12 கோடி ரூபாய் முதலீடு செய்தனர். மாதந்தோறும் பணத்தை கொடுத்து வந்த நிறுவனத்தினர், திடீரென எட்டு மாதங்களாக முதலீட்டாளர்களுக்கு பணத்தை கொடுக்கவில்லை.முதலீட்டாளர்கள் மற்றும் ஊழியர்கள் நிதி நிறுவன உரிமையாளர் மேத்யூவிடம் கேட்ட போது, ஜி.எஸ்.டி., வரி செலுத்தாததால் பங்கு சந்தை கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.வரி செலுத்தியதும், முதலீடு செய்தவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுத்து விடுவதாகவும் தெரிவித்தார். ஆனால், பணத்தை கொடுக்கவில்லை. ஊழியர்களுக்கு எட்டு மாதங்களாக சம்பளமும் கொடுக்கவில்லை.முதலீடு செய்தவர்கள் நிறுவன ஊழியர்களிடம் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர். உரிமையாளர் மேத்யூவை போனில் அழைத்த போது, அவர் அழைப்பை துண்டித்துள்ளார். முதலீடு செய்தவர்களிடம் பதிலளிக்க முடியாத ஊழியர்கள் நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ