உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அலுவலக பணிகளில் ஆசிரியர்கள்: கற்பித்தல் பணி பாதிப்பதாக புகார்

அலுவலக பணிகளில் ஆசிரியர்கள்: கற்பித்தல் பணி பாதிப்பதாக புகார்

கோவை: இல்லம் தேடி கல்வி மைய பணிகளை கண்காணித்தல், தன்னார்வலர்களுக்கு ஊதியம் பெற்று தருதல், பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பணிகளில் ஆசிரியர்களைஈடுபடுத்துவதால், பள்ளிகளில் கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.கொரோனா சமயத்தில் ஏற்பட்ட, கற்றல் இடைவெளி போக்க, மாநிலம் முழுக்க, 1.80 லட்சம் இல்லம் தேடி கல்வி மையங்கள் அமைக்கப்பட்டன. இங்கு, மாலை நேர டியூஷன் எடுக்கப்படுகிறது. எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பாட சந்தேகங்களை, தன்னார்வலர்கள் விளக்குகின்றனர். இவர்களுக்கு மாதம், 1,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டம் சரியாக செயல்படுவதை கண்காணித்தல், தன்னார்வலர்களுக்கு ஊதியம் பெற்று தருதல், பயிற்சி அளித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள, ஆசிரியர்கள் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.வட்டாரத்திற்கு ஒருவர் வீதம், 385 ஆசிரியர்கள், கண்காணிப்பாளர்களாக உள்ளனர். இவர்கள், பள்ளிகளில் கற்பித்தல் பணிகளில் இருந்து விடுவித்து, முழுநேர அலுவலக பணிகள், ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்கு பதிலி ஆசிரியர்களும் நியமிக்காததால், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.

ஆசிரியராவது வேண்டும்'

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அரசு கூறுகையில், '' தொடக்கக்கல்வித்துறையில் கடந்த 10 ஆண்டுகளாக, புதிய நியமனங்கள் இல்லை. ஓய்வு பெறுவோர், விருப்ப ஓய்வு பெறுவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. தற்போதைய சூழலை சமாளிக்க குறைந்தபட்சம், 10 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இச்சூழலில், இல்லம் தேடி கல்வி மைய கண்காணிப்பு பணிகளிலும், ஆசிரியர்களை ஈடுபடுத்துவதால், கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது. புதிய நியமனம் தாமதமாகும் பட்சத்தில், தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்க, கல்வித்துறை முன்வர வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Hari Bojan
பிப் 13, 2024 15:19

உன்னைச்சொல்லி குற்றமில்லை என்னைச்சொல்லி குற்றமில்லை அரசியல் செய்த குற்றமே


ராஜா
பிப் 13, 2024 09:48

வட்டிக்கு விடும் தொழில் பாதிக்கப்படுகிறது என்பது தான் உண்மை.


Barakat Ali
பிப் 13, 2024 10:40

ஆசிரியர்கள் கூசாமல் ..........


Arachi
பிப் 13, 2024 09:42

ஆசிரியர்களின் கோரிக்கை வேதனை நேர்மையானதே. பாடத்திட்டம் மற்றும் கற்றல் கற்பித்தல் நிகழ்வு ஒரு நாளில் குறிப்பிட்ட காலத்திற்குள் அதாவது பள்ளி நேரத்திற்குள் வாரம் தோறும் முடிக்கப்பட வேண்டும். இது உலகம் முழுவதும் நடைபெறும் கற்றல் கற்பித்தல் நிகழ்வு. நல்ல ஆசிரியர் முழு தயாரிப்பு நிலையில் வர வேண்டும். அவரது தொழில் அல்லது பணி மாணவர்களுக்கு கற்பித்தல் மற்றும் அவர்களை நல்வழியில் நடத்துவது. வேறு சம்பந்தமில்லாத வேற்றுப்பணிக்கு அமர்த்தும் போது அவர்களது செயல்திறன். ஒரு நாளில் பள்ளி முடிந்து மாலை வேளையில் தனி வகுப்பு நடத்த வேண்டும் என்று எந்த பாடத்திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. மாலை வேளை மாணவர்கள் விளையாட வேண்டும். Extra class நடத்துவது என்பது எந்த கலைத்திட்டத்திலும் பாடத்திட்டத்திலும் வலியுறுத்தி சொல்லப்படவில்லை. மாலையில் மாணவர்கள் மனதளவில் சோர்ந்த இருப்பார்கள். They are mentally tired. இது போன்று ஆசிரியர்களை பிற பணிக்கு பயன்படுத்துவதால் மன அழுத்தம் அதிகரிக்கும். தயவுசெய்து இந்த தவறை மீண்டும் மீண்டும் எந்த அரசும் செய்யாதீர்கள். குறிப்பாக தொடக்கக்கல்வி ஆசிரியர்களை. பிற தற்காலிகமாக அரசு சார்ந்த பணிகளுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அணுகலாம். சரியாக செய்கிறார்களா என்பதை அந்தந்த அலுவலக உயர் அதிகாரிகள் கண்காணிக்கலாம்.


தமிழ் மைந்தன்
பிப் 13, 2024 13:07

பல கிராமப்புற பள்ளிகல் ஒரு மாணவர்கள் மட்டுமே உள்ளார்கள் .அப்படி சுமார் மூவாயிரம் பள்ளிகள் உள்ளது . அவைகளை அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைத்து விட்டால் ஆசிரியர்கள் மிச்சமாவார்கள் மக்களின் வரி பணமும் வெட்டி செலவு ஆவது தடுக்கப்படும்


Ramesh Sargam
பிப் 13, 2024 09:31

அரசியல்வாதிகள் பின்னால் படித்தவர்கள் அவ்வளவுபேர் வீணாக சுற்றுகிறார்கள். சினிமா நடிகர், நடிகைகள் பின் படித்தவர்கள் அவ்வளவுபேர் வீணாக சுற்றுகிறார்கள். அவர்களுக்கு இந்த ஆசிரியர் பணி கொடுக்கவேண்டும். அரசியல்வாதிகளும், நடிகர், நடிகைகளும் தங்கள் பின்னால் சுற்றும் படித்த இளைஞர்களுக்கு "முதலில் பசங்களுக்கு பாடம் கற்பிக்கும்பணியை செய். அதற்கு பிறகு நேரம் இருந்தால் எங்களுக்கு பணிவிடை செய்" என்று கூறவேண்டும்.


புதிய வீடியோ