| ADDED : ஜன 23, 2024 11:52 PM
வால்பாறை;முதல்வர் காப்பீடு திட்டத்தில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்காக, வால்பாறையில் வரும், 28ல் மீண்டும் முகாம் நடக்கிறது.வால்பாறையில் முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட சிறப்பு முகாம் கடந்த, 20, 21 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக நடந்தது. நகராட்சிக்கு உட்பட்ட, 21 வார்டுகளில் வசிக்கும் மக்கள் முகாமில் கலந்து கொண்டனர்.வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறையில் கடந்த வாரம் நடந்த முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தில், 2,500 பேர் விண்ணப்பித்துள்ளனர்,' என்றனர்.பொள்ளாச்சி எம்.பி., சண்முகந்தரம் அறிக்கையில், 'விரிவான காப்பீடு திட்டத்தில் விண்ணப்பிக்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும் வகையில், வரும், 28ம் தேதி வால்பாறை நகராட்சி சமுதாயக்கூடத்தில் முகாம் நடக்கிறது.இதுதவிர புதிய மகளிர் சுய உதவிக்குழு அமைத்தல்,சிறு மற்றும் நடுத்தர தொழில் செய்வோருக்கான கடன் உதவி முகாம், தமிழ்நாடு ஆதிதிராவிட வீட்டு வசதி மற்றும் தாட்கோ, பிரதமர் வேலைவாய்பு உருவாக்கும் திட்டம், பிரதமரின் உணவு பதப்படுத்தும், குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் தொடர்பான முகாமிலும் பொதுமக்கள் சேர்ந்து பயன்பெறலாம்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.