உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மேம்பாலத்தில் கான்கிரீட் சேதம்; ஓட்டுநர்கள் அவதி

மேம்பாலத்தில் கான்கிரீட் சேதம்; ஓட்டுநர்கள் அவதி

பொள்ளாச்சி; பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு, வடுகபாளையம் மேம்பாலத்தில், கான்கிரீட் சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளதால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.கேரள மாநிலத்தை இணைக்கும் முக்கிய ரோடான, பொள்ளாச்சி ---- பாலக்காடு ரோட்டில், வடுகபாளையம் பிரிவு அருகே, பொள்ளாச்சி - -போத்தனுார் ரயில் பாதை குறுக்கிடுகிறது. ரயில்வே கேட்டை கடப்பதற்கு, நான்கு வழி மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.மாநில நெடுஞ்சாலை துறை திட்டங்கள் பிரிவு வாயிலாக, 55.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பாலம், கடந்த, 2022ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. தரமின்றி கட்டப்பட்ட இந்த மேம்பாலத்தில், இரும்பு சட்டங்கள் அடிக்கடி பெயர்ந்தன. இதையடுத்து, சமீபத்தில் சீரமைப்பு பணிகள் நெடுஞ்சாலைத்துறை (திட்டங்கள்) பிரிவு வாயிலாக மேற்கொள்ளப்பட்டது.இந்நிலையில், பாலத்தின் நடுவே கான்கிரீட் சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டுநர்கள் தடுமாறி விபத்துக்கு உள்ளாகின்றனர்.வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது: வடுகபாளையம் பாலம் பாலக்காடு செல்லும் முக்கிய வழித்தடமாக உள்ளது. ஆனால், பாலம் போதிய பராமரிப்பின்றி உள்ளது. ஏற்கனவே, இரும்பு சட்டங்கள் பெயர்ந்து சீரைமக்கப்பட்டது.தற்போது,மேம்பாலத்தின் நடுவே கான்கிரீட் பெயர்ந்து பள்ளம் ஏற்பட்டுள்ளதால், வாகனங்களில் செல்லும் போது தடுமாற்றம் ஏற்படுகிறது. பாலம் அதிர்வதுடன், அந்த பள்ளத்தை கனரக வாகனங்கள் கடக்கும் போது, அதை சுற்றியுள்ள தளங்களும் விரிசல் விடும் சூழல் உள்ளது.வேகமாக வரும் வாகனங்கள், இப்பகுதியில், குழியில் சிக்கி கொள்வதால் விபத்துகள் ஏற்படுகிறது. உடனடியாக சீரமைப்பு பணி மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ