உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொது இடத்தில் கான்கிரீட் கலவை; நடவடிக்கை பாயும்

பொது இடத்தில் கான்கிரீட் கலவை; நடவடிக்கை பாயும்

கோவை, ; சென்னைக்கு அடுத்து வளர்ந்த நகரான கோவையில் கட்டுமான பணிகள் அதிகம் நடந்து வருகின்றன. இதற்கென 'கான்கிரீட்' கலவை கொண்டு செல்லும் வாகனங்கள் பணிகள் முடிந்ததுபோக மீதம் இருக்கும் கலவையை ரோட்டின் ஓரம், மழைநீர் வடிகால், மக்கள் போக்குவரத்து இல்லாத இடங்களில் கொட்டிச் செல்கின்றன.மீதமுள்ள சிமென்ட் கான்கிரீட் கலவையுடன், தண்ணீர் சேர்த்து இப்படி பொது இடங்களில் கொட்டுவதால் மேடு உருவாகி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், சாலை விபத்துகளும் ஏற்படுகின்றன. மழைநீர் வடிகால்களில் அடைப்பும் ஏற்படுகிறது. இவ்வாறு, பொது இடங் களில் கான்கிரீட் கலவை கொட்டினால் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என, மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ