உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குப்பை வரி வசூலிக்கும் மாநகராட்சிக்கு கண்டனம்

குப்பை வரி வசூலிக்கும் மாநகராட்சிக்கு கண்டனம்

கோவை: கோவை மண்டல இருசக்கர வாகன பழுதுபார்ப்போர் நல சங்க கூட்டம், சங்க தலைவர் சுப்பிரமணியன் தலைமையில், சுந்தராபுரத்தில் நடந்தது.கூட்டத்தில், 'உரிமம், தொழில்வரி, குப்பை வரி என்ற பெயரில் மாநகராட்சி ஊழியர்கள், நிர்பந்தித்து அதிகமாக வரி வசூல் செய்வது கண்டிக்கத்தக்கது.இருசக்கர வாகன பழுதுபார்ப்போரை தொழிலாளர்களாகக் கருதி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தொழில் வரி, குப்பை வரி முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும்.உரிமத்தை ஜன., தோறும் புதுப்பிக்க வேண்டும். உரிமத்துக்கான தொகை மட்டுமே வசூலிக்க வேண்டும். உரிமம் பெற, ஆதாரை மட்டும் ஆவணமாகக் கோர வேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக சுப்பிரமணியன், உதவி தலைவராக சரண்யா, பொது செயலாளராக சாகுல் அமீது, உதவி செயலாளராக எட்வர்ட், பொருளாளராக ரிஸ்வான் தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை