உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பயணி தவறவிட்ட ரூ.13,200 ஒப்படைத்தார் கண்டக்டர்

 பயணி தவறவிட்ட ரூ.13,200 ஒப்படைத்தார் கண்டக்டர்

அன்னூர்: பஸ்ஸில் பயணி தவறவிட்ட பணத்தை நடத்துனர் ஒப்படைத்தார். அன்னூர் அருகே காட்டம்பட்டியைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம், 55. இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு காந்திபுரத்தில் இருந்து கிராமங்கள் வழியாக அன்னூர் செல்லும் 45 இ அரசு போக்குவரத்து கழக டவுன் பஸ்ஸில் பயணம் செய்தார். அப்போது மறந்து பணப்பையை பஸ்ஸில் விட்டு விட்டு சென்று விட்டார். ஊருக்கு சென்ற பிறகு நினைவு வந்து அரசு போக்குவரத்துக் கழக கிளை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். இதற்குள் பஸ்ஸில் இருந்த பணப்பையை, நடத்துனர் சிவக்குமார் தேடி எடுத்து அரசு போக்குவரத்துக் கழக கிளை அலுவலகத்தில் ஒப்படைத்தார். பணப்பையை தவறவிட்ட மோகன சுந்தரத்திடம் 13,200 ரூபாய், வங்கி ஏ.டி.எம். கார்டு, ஆதார், டிரைவிங் லைசன்ஸ் அடங்கிய அந்த பை ஒப்படைக்கப்பட்டது. பயணி மோகனசுந்தரம், நடத்துனருக்கும், அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகத்தினருக்கும் நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ