உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கணினி தொடர்பு தகவலியல் மாநாடு

கணினி தொடர்பு தகவலியல் மாநாடு

கோவை:எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள, ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி சார்பில், கணினி தொடர்பு மற்றும் தகவலியல் (ஐ.சி.சி.சி.ஐ.,) குறித்த சர்வதேச மாநாடு நடந்தது.இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர்ஸ் உடன் இணைந்து, கணினி, தகவல் தொடர்பு மற்றும் தகவலியல் துறைகளில் உள்ள சவால்களுக்கு தீர்வு காணும் வகையில், இம்மாநாடு நடத்தப்பட்டது.மாநாட்டில், மொத்தம் ஆயிரத்து 635 ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டதில், தேர்வு செய்யப்பட்ட 515 பதிவு ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஐ.இ.இ.இ., டிஜிட்டல் எக்ஸ்புளோரில் இடம்பெற உள்ளன. இஸ்ரோவைச் சேர்ந்த செந்தில் குமார், போகேந்திர ராவ் மற்றும் டி.ஆர்.டி.ஓ., வைச் சேர்ந்த சந்தானம், சாய்ராம் பொறியியல் கல்லுாரியின் முதல்வருமான பொற்குமரன் சிறப்புரையாற்றினர்.கல்லுாரி தலைவர் தங்கவேலு, முதல்வர் ரவிகுமார், ஐ.சி.சி.சி.ஐ., மாநாட்டுத் தலைவர் கலையரசி, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை