உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வரி விதிப்பு குழு உறுப்பினர் பதவிக்கு காங்., கவுன்சிலர் தேர்வு

வரி விதிப்பு குழு உறுப்பினர் பதவிக்கு காங்., கவுன்சிலர் தேர்வு

கோவை: கோவை மாநகராட்சியில் காலியாக இருந்த, வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு உறுப்பினர் பதவிக்கு நடத்தப்பட்ட மறைமுக தேர்தலில், காங்., கவுன்சிலர் நவீன்குமார், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். கோவை மாநகராட்சி, 56வது வார்டு கவுன்சிலர் (காங்.,) கிருஷ்ணமூர்த்தி, கடந்தாண்டு உயிரிழந்தார். அவர், வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு உறுப்பினராக பதவி வகித்தார். அப்பதவியை நிரப்புவதற்கான மறைமுகத் தேர்தல், விக்டோரியா ஹாலில் நேற்று நடந்தது. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், தேர்தல் நடத்தும் அதிகாரியாக செயல்பட்டார். உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக, கிழக்கு மண்டல உதவி கமிஷனர் முத்துசாமி பணியாற்றினார். ஐந்தாவது வார்டு கவுன்சிலர் (காங்.,) நவீன்குமார், மனு தாக்கல் செய்தார். காங்., கவுன்சில் குழு தலைவர் ஜெயபால் முன்மொழிந்தார். ஆளுங்கட்சி கவுன்சில் குழு தலைவர் கார்த்திகேயன் வழிமொழிந்தார். வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக, கமிஷனர் அறிவித்தார். அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். கவுன்சிலர் பதவி நிரப்புவது எப்போது மாநகராட்சியில், 56வது வார்டு கவுன்சிலர் பதவி இன்னும் காலியாகவே இருக்கிறது. இடைத்தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடு நடந்தபோது, சிறப்பு கவனம் செலுத்தி, தார் ரோடு, மழை நீர் வடிகால் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. மதுரை ஐகோர்ட் கிளை பிறப்பித்த உத்தரவு காரணமாக, இடைத்தேர்தல் நடத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அவ்வார்டுக்கான அடிப்படை தேவையை மாநகராட்சி கவனத்துக்கு கொண்டு செல்ல, கவுன்சிலர் அவசியம் தேவை என்பதால், விரைந்து இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி