மேலும் செய்திகள்
மினி வேன் எரிந்து நாசம்
03-Jun-2025
கருமத்தம்பட்டி: கோவை வடக்கு மாவட்ட காங்.,கட்சி சார்பில், சூலூர் சட்டசபை தொகுதி தேர்தல் ஆயத்த கூட்டம், மாவட்ட தலைவர் மனோகரன் தலைமையில் கருமத்தம்பட்டியில் நடந்தது. தேசிய செயலாளர் சூரஜ் ஹெக்டே, மாநில தலைவர் செல்வ பெருந்தகை ஆகியோர் டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கி பேசினர். மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்று பேசினர். மாநில தலைவர் செல்வ பெருந்தகை நிருபர்களிடம் கூறுகையில், முருகன் சக்தி வாய்ந்த கடவுள். தேர்தலுக்காக முருகரை வைத்து பா.ஜ., அரசியல் செய்கிறது. அவர் பா.ஜ.,வை சூரசம்ஹாரம் செய்வார். பா.ம.க., பா.ஜ.,பக்கம் போகாமல் இருக்கும் என நினைக்கிறோம். டிஜிட்டல் ஐ.டி., கார்டு கொடுக்கும் பணியின் வாயிலாக தேர்தல் பணிகளும் துவங்கியுள்ளன, என்றார்.
03-Jun-2025