உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  அரசியலமைப்பு தின உறுதி மொழி ஏற்பு

 அரசியலமைப்பு தின உறுதி மொழி ஏற்பு

கோவை: இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட தினமான நவ.,26(நேற்று) அரசியலமைப்பு தினம் கடை பிடிக்கப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு ஏற்று கொள்ளப்பட்டதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் அரசியலமைப்பு தினமாக கொண்டாடப் படுகிறது. கோவை வக்கீல் சங்கம் சார்பில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையில் உள்ள சாராம்சத்தை வாசித்து, உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி, கோர்ட் வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், வக்கீல் சங்க தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் சுதீஷ், பார் கவுன்சில் துணை தலைவர் அருணாச்சலம் மற்றும் சங்க நிர்வாகிகள், வக்கீல்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை