உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடிபோதையில் தகராறு கட்டட தொழிலாளி கொலை

குடிபோதையில் தகராறு கட்டட தொழிலாளி கொலை

பெ.நா.பாளையம், ;பெரியநாயக்கன்பாளையம் அருகே குடிபோதையில் கொலை செய்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள மத்தம்பாளையம், கருப்புசாமி நகரில் வசிப்பவர் கணேஷ் மூர்த்தி, தனது மருமகனுக்காக அதே பகுதியில் புதியதாக வீடு கட்டி வருகிறார். கட்டட பணியில் தஞ்சாவூரைச் சேர்ந்த இளங்கோவன், 35, ராஜா, 36, ஈடுபட்டு வந்தனர்.நேற்றுக் காலை கட்டடத்தில் உள்ள ஒரு அறையில் ரத்த வெள்ளத்தில் இளங்கோவன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி., பொன்னுசாமி, இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.இதில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ராஜா, இளங்கோவனை செங்கற்களால் தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக, ராஜாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி