உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை: கோவை மாவட்ட கட்டுமானத் தொழிலாளர் சங்கம், சி.ஐ.டி.யு., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், 'பொங்கல் தொகுப்புடன் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும், ஓய்வூதிய ஆணையை வெளியிட வேண்டும், ஓய்வூதியத்தை ரூ.3,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், 3 ஆண்டுகளாக வழங்காமல் உள்ள பாதுகாப்பு உபகரணங்களை உடனே வழங்க வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷம் எழுப்பப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ