உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டம்

நெகமம்; விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நெகமம் சுற்றுப்பகுதி கிராமங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில், நெகமம் போலீஸ் ஸ்டேஷனில், விநாயகர் சதுர்த்தியன்று சிலை வைப்பது, பாதுகாப்பு நடவடிக்கை, விசர்ஜன ஊர்வலம் குறித்து ஹிந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், விநாயகர் சிலைகளை குறிப்பிட்ட நேரத்தில் வைத்து எடுத்து ச் செல்ல வேண்டும். அமைதியை கடைபிடித்து, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் விழாவை கொண்டாட வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது. மேலும், ஹிந்து அமைப்பினர் சார்பில், 20 விநாயகர் சிலைகளும், பொதுமக்கள் சார்பில், 27 சிலைகளும் வைக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி