உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கூட்டுறவு சங்க பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்

கூட்டுறவு சங்க பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்

ரேஷன் கடை ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், பொருட்கள் வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், ரேஷன் கடைகளில் மளிகை உள்ளிட்ட பொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்ய வலியுறுத்துவதோடு, காலாவதியான பொருட்களை திரும்ப பெறாமல், விற்பனையாளர்களிடம் தொகை வசூலிப்பதை கண்டித்தும், குறைந்த ஊதியத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் பல கி.மீ., துாரத்தில் பணியாற்றி வரும் நிலையில், அருகிலுள்ள கடைகளுக்கு இடமாறுதல் வழங்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி, தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்தில், 55 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களிலுள்ள, 250 பேர், இரு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில், மடத்துக்குளம் வட்டாரத்திலுள்ள பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் சாமியப்பன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் கண்ணன், பொருளாளர் சின்னத்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பொள்ளாச்சி

கோவை மாவட்ட தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர், மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றுமுன்தினம் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆழியாறு பூங்கா அருகே கூடிய அலுவலக சங்க பணியாளர்கள், ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கைகள் குறித்து பேசினர். - நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ