உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தொடர்ச்சியான கற்றல் வெற்றியை தேடித்தரும்

 தொடர்ச்சியான கற்றல் வெற்றியை தேடித்தரும்

கோவை: ஜே.சி.டி., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் 12வது பட்டமளிப்பு விழா நடந்தது. அண்ணா பல்கலை மின் மற்றும் மின்னணு பொறியியல் துறை பேராசிரியர் பட்நாயக் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அவர் பேசுகையில், ''புதிய பாதைகள், வாய்ப்புகளால் உலகம் நிரம்பியுள்ளது. தொடர்ந்து கற்றல் மறறும் பல்துறை அறிவை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இது எந்த துறை யிலும் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும், '' என்றார். விழாவில் 170 இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. ஜே.சி.டி., கல்வி நிறுவனங்களின் செயலாளர் துர்கா, கல்லுாரி முதல்வர் மனோகரன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை