உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி பட்டமளிப்பு விழா

ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி பட்டமளிப்பு விழா

போத்தனூர்: கோவைப்புதூர் அருகேயுள்ள கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா, நேற்று நடந்தது. கல்லூரி அரங்கில் நடந்த, 35வது பட்டமளிப்பு விழாவுக்கு, கிருஷ்ணா கல்வி குழும முதன்மை செயல் அலுவலர் சுந்தரராமன் தலைமை வகித்தார். இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தரப்படுத்துதல் சோதனை மற்றும் தரச்சான்றிதழ் இயக்குநரக இயக்குனர் ஜெனரல் வெள்ளைபாண்டி பேசுகையில், ''வேகமாக மாறி வரும் இன்றைய உலகில், தினமும் மாற்றம் ஏற்படுகிறது. நாமும் அதற்கேற்ப புதியவற்றை கற்றுக் கொண்டே இருக்கவேண்டும். சவால்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். விடாமுயற்சி, திறமையை விரிவுபடுத்த வேண்டும்,'' என்றார். தொடர்ந்து, அவர் 902 பேருக்கு பட்ட சான்றிதழை வழங்கினார். முன்னதாக, கல்லூரி முதல்வர் சுமித்ரா வரவேற்றார். கல்வி குழும இயக்குனர் நாராயணா, துறை தலைவர்கள். பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !