மேலும் செய்திகள்
கொப்பரை ஏலத்தில் கிலோ ரூ.250 விலை
26-Jun-2025
ஆனைமலை; ஆனைமலையில் நடந்த கொப்பரை ஏலத்தில், கிலோவுக்கு, 256.60 ரூபாய் அதிகபட்ச விலை கிடைத்தது.ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கண்காணிப்பாளர் செந்தில்முருகன் தலைமையில் கொப்பரை ஏலம் நடந்தது. முதல் தர கொப்பரை, 272 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு, 247 முதல், 256.60 ரூபாய் வரை விலை கிடைத்தது.இரண்டாம் தர கொப்பரை, 441 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு, 150 முதல், 225 ரூபாய் வரை விலை கிடைத்தது.மொத்தம், 713 கொப்பரை மூட்டைகளை, 92 விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒன்பது வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர். இந்த வாரம், 70.59 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொத்தம், 320.85 குவிண்டால் கொப்பரை ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டது. இத்தகவலை, விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
26-Jun-2025