உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இ-நாம் வாயிலாக கொப்பரை ஏலம்

இ-நாம் வாயிலாக கொப்பரை ஏலம்

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இ-நாம் திட்டம் வாயிலாக, 22 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை ஏலம் விடப்பட்டது. கிணத்துக்கடவு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை இருப்பு வைத்து விற்பனை செய்கின்றனர். கடந்த ஏப்ரல் முதல் தற்போது வரை, இ-நாம் திட்டத்தின் வாயிலாக, 529 டன் கொப்பரை, 22 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. இதன் வாயிலாக, 158 விவசாயிகள் மற்றும் 22 வியாபாரிகள் பயனடைந்துள்ளனர். தற்போது, முதல் தர கொப்பரை கிலோ, 200 முதல் 210 ரூபாய் வரையிலும், இரண்டாம் தர கொப்பரை கிலோ, 130 முதல் 160 ரூபாய் வரையிலும் விற்பனை ஆகிறது. இத்தகவலை கிணத்துக்கடவு விற்பனை கூட கண்காணிப்பாளர் செல்வராஜ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை