மேலும் செய்திகள்
ரூ.22.51 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
13-Dec-2025
பொள்ளாச்சி: ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 42 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை ஏலம் நடந்தது. ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் நடந்தது. நேற்று முன் தினம் நடந்த ஏலத்தில், 728 மூட்டைகள் கொப்பரை, 42 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. இதில், முதல் தர கொப்பரை, (225 மூட்டைகள்), 170.20 முதல் 183.60 ரூபாய்க்கு விற்பனையானது. இதே போன்று, இரண்டாம் தர கொப்பரை (473 மூட்டைகள்), 142.30 முதல் 169.50 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த ஏலத்தில், 80 விவசாயிகள் மற்றும் 5 உள் மாவட்ட வியாபாரிகள், 6 வெளிமாவட்ட வியாபாரிகள் என, 11 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இத்தகவலை, ஆனைமலை விற்பனை கூட கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஜெயராம கிருஷ்ணன் தெரிவித்தார்.
13-Dec-2025