ரூ.1.17 கோடிக்கு கொப்பரை விற்பனை
நெகமம்; நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், விவசாயிகள் விளைபொருட்களை இருப்பு வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதில், மார்ச் மாதத்தில், 101 மெட்ரிக் டன் அளவு கொப்பரை, 1.17 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில், 21 விவசாயிகள் மற்றும் 8 வியாபாரிகள் பயனடைந்தனர்.முதல் தர கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ 174 ரூபாய்க்கும், இரண்டாம் தர கொப்பரை 154 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.மேலும், நெகமம் சுற்று வட்டார விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை கூடத்தின் வாயிலாக விற்பனை செய்தும், விலை குறையும்போது கிடங்கில் இருப்பு வைத்து, விலை உயர்வின் போது விற்பனை செய்யவும் வசதி உள்ளது. எனவே, விவசாயிகள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என, விற்பனை கூட கண்காணிப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் தெரிவித்தார்.