மேலும் செய்திகள்
பாரதியார் பல்கலையில் பொங்கல் விழா
14-Jan-2026
கோவை: பாரதியார் பல்கலையில், 'ஸ்டார்ட் அப்கள், தொழில்நுட்ப மாற்றம் மற்றும் காப்புரிமை வணிகமயமாக்கல் குறித்த விழிப்புணர்வு என்ற தலைப்பில் பயிலரங்கு நடந்தது. ஆராய்ச்சி, தொழில்நுட்ப மேம்பாட்டு மையம்(சி.ஆர்.டி.டி.,) சார்பில் பயிலரங்கு நடந்தது. தமிழக உயர்கல்வி மன்றத்தின் உறுப்பினர் செயலர் வேல்முருகன் பேசுகையில், ''பல்கலைகள் புதுமை, தொழில் முனைவோருக்கான மையங்களாக மாறி வருகின்றன. கல்வி ஆராய்ச்சிகள் தேசிய மற்றும் மாநில புதுமை முன்னுரிமைகளுடன் இசைவுடன் இருக்க வேண்டும். தொழில்நுட்ப மாற்றம், காப்புரிமை பெறுதல், வணிகமயமாக்கல் ஆகியவை சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அவசியம்,'' என்றார். முன்னதாக சி.ஆர்.டி.டி., இயக்குனர் பரிமேலழகன் வரவேற்றார். பதிவாளர் ராஜவேல் தலைமை வகித்தார்.ஸ்டார்ட்அப் தமிழ்நாடு, சென்னை திட்டத் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
14-Jan-2026