உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தீவிரவாத தடுப்பு பிரிவு அலுவலக கோரிக்கை ஒருவழியாக ஓகே 

தீவிரவாத தடுப்பு பிரிவு அலுவலக கோரிக்கை ஒருவழியாக ஓகே 

கோவை : கோவையில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு, கோவையில் தீவிரவாத செயல்களை தடுக்கும் வகையில், 2024ம் ஆண்டு தீவிரவாத தடுப்பு பிரிவு கோவையில் அமைக்கப்பட்டது. முதலில் காந்திபுரத்தில் செயல்பட்டு வந்தது.பின்னர், இடப்பற்றாக்குறை காரணமாக, தீவிரவாத தடுப்பு பிரிவு அலுவலகம் சிட்ரா, கோல்டு வின்ஸ் பகுதியில், ஒரு தனியார் கட்டடத்திற்கு மாற்றப்பட்டு, தற்போது அங்கு எஸ்.பி., பத்ரிநாராயணன் தலைமையில், செயல்பட்டு வருகிறது. தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு, தனி அலுவலகம் கட்ட வேண்டும் என, அதிகாரிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், நேற்று நடந்த போலீசாருக்கான மானிய கோரிக்கையில் இதற்கான அறிவிப்பு வெளியானது. அதில், ரூ.5.98 கோடி செலவில் தீவிரவாத தடுப்பு பிரிவு அலுவலகம் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கோவை மாவட்டம் நீலாம்பூர் பகுதியில், புதிய போலீஸ் ஸ்டேஷன் கட்டப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது. பொது மக்கள் எளிதில் அணுகவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் அதிகம் உள்ள பகுதியாக இருப்பதால், இப்பகுதியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், கோவை மாவட்டம், நீலாம்பூர் பகுதியில், ரூ.4.88 கோடியில் புதிய ஸ்டேஷன் கட்டப்படவுள்ளது. இந்த இரு அறிவிப்புகளையும் போலீசார் வரவேற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை