கல்லுாரிகளுக்கான கே.ஜி.ஐ.எஸ்.எல்., டிராபி வாலிபால் போட்டியில் அசத்தல் வெற்றி
கோவை : 'கே.ஜி.ஐ.எஸ்.எல்., டிராபி' வாலிபால் போட்டியில், கே.ஜி. ஐ.எஸ்.எல்., அணி, கே.பி.ஆர்., கல்லுாரி அணியை வென்று முதல் பரிசை தட்டியது.சரவணம்பட்டி, கே.ஜி.ஐ.எஸ்.எல்., தொழில்நுட்ப கல்லுாரியில் 'கே.ஜி.ஐ.எஸ்.எல்., டிராபி' போட்டிகள் இரு நாட்கள் நடந்தன. இதில், மாணவ, மாணவியிருக்கு வாலிபால், மாணவியருக்கான த்ரோபால், மாணவர்களுக்கு கபடி, பால் பேட்மின்டன் போட்டிகள் இடம்பெற்றன.பால் பேட்மின்டன் போட்டியில், இந்துஸ்தான் கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில் குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி அணியையும், கே.பி.ஆர்., கல்லுாரி, 2-0 என்ற செட் கணக்கில் இந்துஸ்தான் தொழில்நுட்ப கல்லுாரி அணியையும் வென்றது.கே.ஜி.ஐ.எஸ்.எல்., அணி, 2-0 என்ற செட் கணக்கில் கற்பகம் கல்லுாரி அணியையும், ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி அணி, 2-1 என்ற செட் கணக்கில் சி.ஐ.டி., கல்லுாரி அணியையும், ஸ்ரீ சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில் இந்துஸ்தான் கல்லுாரி அணியையும், எஸ்.என்.எஸ்., கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில் கே.பி.ஆர்., கல்லுாரி அணியையும் வென்றது.இறுதிப்போட்டியில், ஸ்ரீ சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணி, 35-32, 35-20 என்ற செட் கணக்கில் எஸ்.என்.எஸ்., கல்லுாரி அணியை வென்று முதலிடம் பிடித்தது. வாலிபால் இறுதிப்போட்டியில், இந்துஸ்தான் கல்லுாரி அணி, 25-23, 25-26, 25-23 என்ற செட் கணக்கில் கே.ஜி. ஐ.எஸ்.எல்., அணியை வென்றது.கபடி போட்டியில், இந்துஸ்தான் கல்லுாரி அணி, 35-28 என்ற புள்ளி கணக்கில் கே.ஜி.ஐ.எஸ்.எல்., அணி வென்றது. மாணவியருக்கான வாலிபால் போட்டியில், கே.ஜி.ஐ. எஸ்.எல்., அணி, 25-16, 25-23 என்ற செட் கணக்கில் கே.பி.ஆர்., கல்லுாரி அணியை வென்றது. வெற்றி பெற்றவர்களுக்கு, கே.ஜி. ஐ.எஸ்.எல்., தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் சுரேஷ்குமார் பரிசுகள் வழங்கினார்.