உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வெள்ளலுார் குப்பை கிடங்கில் செயற்கை குட்டை உருவாக்கம்

வெள்ளலுார் குப்பை கிடங்கில் செயற்கை குட்டை உருவாக்கம்

கோவை: உக்கடம் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரித்த கழிவு நீரை தேக்கும் வகையில், வெள்ளலுார் குப்பை கிடங்கு வளாகத்தில் செயற்கை குட்டை உருவாக்கும் பணி நடக்கிறது.உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர், குழாய்கள் மூலமாக, வெள்ளலுார் குப்பை கிடங்கில் செயற்கை முறையில் உருவாக்கியுள்ள குட்டைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதற்கு அருகாமையில் மற்றொரு குட்டை பராமரிப்பின்றி, முட்புதருடன் நீர்த்தேக்க வழியின்றி இருக்கிறது. அப்பகுதியை சுத்தப்படுத்தி, சுத்திகரித்த கழிவு நீரை தேக்க, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டார்.அதன்படி, குட்டையை சீரமைக்கும் பணி துவக்கப்பட்டிருக்கிறது. முட்புதரை அகற்றுவதோடு, கசிவு ஏற்பட்டு, நிலத்துக்குள் சுத்திகரித்த கழிவு நீர் இறங்காத வகையில், தார்பாலின் ஷீட் பரப்பப்படுகிறது. இங்கு தேக்கப்படும் சுத்திகரித்த நீர், குப்பை கிடங்கு வளாகத்தில் நடப்பட்டுள்ள மரங்களுக்கு பாய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும். தீ விபத்து ஏற்படும் சமயங்களில், தீயணைக்க உபயோகிக்கப்படும் என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை