உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிரெடாய் சார்பில் கோவையில் பேர் புரோ-2025 கண்காட்சி

கிரெடாய் சார்பில் கோவையில் பேர் புரோ-2025 கண்காட்சி

கோவை; கோவை 'கிரெடாய்' சார்பில், 'பேர் புரோ-2025' கண்காட்சி, 8 முதல், 10ம் தேதி வரை காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை, கொடிசியா 'இ' ஹாலில் நடக்கிறது. 30க்கும் மேற்பட்ட முன்னணி டெவலப்பர்களின் ஸ்டால்கள் இடம் பெறுகின்றன. இது குறித்து, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு சங்கங்களின் கூட்டமைப்பு (கிரெடாய்) கோவை கிளை தலைவர் அரவிந்த் குமார், 'பேர் புரோ' தலைவர் சுரேந்தர் விட்டல் ஆகியோர், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: கணகாட்சியில், எஸ்.பி.ஐ., உள்ளிட்ட முன்னணி வங்கிகள் பங்கேற்கின்றன. பட்ஜெட்டில் வீடு கட்டுவோர், வாங்குவோர், வங்கிக்கடன் பெறுவது உள்ளிட்ட தகவல்களை அறிந்து கொள்ளலாம். கட்டுமானம் சார்ந்து தனித்துவம் மிக்க திட்டங்களும், காட்சிக்கு வைக்கப்படுகின்றன. கடந்தாண்டு, 7,500 பேர் பங்கேற்றனர்; இந்தாண்டு, 10 ஆயிரம் பேர் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கிறோம். கோவையில் கட்டுமான தொழில் தொழில் வளர்ச்சியடைந்து வருகிறது. ஐ.டி., நிறுவனங்கள் புதிதாக வரவுள்ளன. வீடு வாங்குவோருக்கு இக்கண்காட்சி ஓர் விழாவாக அமையும்; பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி