உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாற்றுத்திறனாளிகளுக்கு கிரிக்கெட் லீக் போட்டி

மாற்றுத்திறனாளிகளுக்கு கிரிக்கெட் லீக் போட்டி

கோவை : காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் கோயம்புத்துார் காது கேளாத வாய் பேச இயலாதோர் சங்கம் சார்பில், கிரிக்கெட் லீக் போட்டி நடத்தப்படுகிறது.அந்த வகையில், மூன்றாவது சீசன் கிரிக்கெட் போட்டி, பெரியநாயக்கன்பாளையத்தில் நடந்தது. 'நாக் அவுட்' முறையில் நடந்த போட்டியில், இளையோர் அணியினர், மூத்த அணி மற்றும் பெண்கள் தனி பிரிவு என, மூன்று பிரிவுகளாக போட்டிகள் இடம்பெற்றன.இளையோருக்கான போட்டியில், உக்கடம் கிரிக்கெட் டவர்ஸ், மேட்டுப்பாளையம் கிரிக்கெட் தண்டர்ஸ், காந்திபுரம் கிரிக்கெட் கிராஸ்கட் ரோடு ஆகிய அணிகள், முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தன. இதேபோல், லெஜண்ட்ஸ் பிரிவில், சரவணம்பட்டி ஐ.டி., பார்க் அணி முதல் இடத்தையும், கோவை சூப்பர் கிங்ஸ் இரண்டாம் இடத்தையும் பிடித்தன. பெண்கள் பிரிவில், வுமன் வாரியர் முதல் இடத்தையும், வுமன் விங்ஸ் கிரிக்கெட் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை