மேலும் செய்திகள்
கஞ்சா விற்பனை கேரள நபர் கைது
28-Oct-2026
மதுபோதையில் சுத்தியலால் தாக்கியவர் கைதுஜி.என்.மில்ஸ் : சுப்ரமணியம்பாளையத்தை சேர்ந்தவர் கோபிநாத். டீச்சர்ஸ் காலனியில் உள்ள டாஸ்மாக்கில் மது அருந்தும் போது அதே பகுதியை சேர்ந்த கார்த்திக், உடன் தகராறு ஏற்பட்டது. மாலை தனது உறவினர் கடையில் கோபிநாத் நின்றிருந்த போது அங்கு வந்த கார்த்திக் தகராறில் ஈடுபட்டு சுத்தியலால் தலையில் தாக்கினார். கோபிநாத், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். துடியலுார் போலீசார் கார்த்திக்கை சிறையில் அடைத்தனர்.==கஞ்சா விற்பனை; இருவர் கைதுசரவணம்பட்டி : போலீசார் குன்னிநாயக்கர் தோட்டம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த நபரிடம் சோதனை செய்தனர். அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருப்பது தெரிந்தது. விசாரணையில் அவர் சின்னவேடம்பட்டியில் தங்கி லேசர் கட்டிங் நிறுவனத்தில் பணிபுரியும் அஸ்ஸாம் நல்பாரியை சேர்ந்த ரஹீம் பத்சா, 28 எனத் தெரிந்தது. அவரை சிறையில் அடைத்த போலீசார், 1.130 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.இதேபோல், ரேஸ்கோர்ஸ் போலீசார் கஞ்சா வைத்திருந்த கேரளா பாலக்காட்டை சேர்ந்த சாயித், 29 என்பவரை சிறையில் அடைத்தனர்.==
28-Oct-2026