கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்
வழக்கில் ஆஜராகாத குற்றவாளி மீது வழக்கு கரும்புகடை : பூங்கா நகர் ஜலீல், 30 மீது உக்கடம் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு உள்ளது. இதில் கைது செய்யப்பட்டவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். 18 வாய்தாவுக்கு ஆஜராகவில்லை. நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. குனியமுத்துாரில் இவர் மீது கஞ்சா கடத்தல் வழக்கு பதியப்பட்டது. இதிலும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதியப்பட்டது. மூன்று திருநங்கைகள் மீது வழக்கு துடியலுார் : துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் லாரன்ஸ், 33; கால்டாக்ஸி டிரைவர். சில தினங்களுக்கு முன், மேட்டுப்பாளையம் ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த மூன்று திருநங்கைகள் பணம் கேட்டனர். அவர் மறுக்கவே ஒரு திருநங்கை லாரன்ஸின் மொபைல்போன், பர்ஸை பறித்தார். பர்ஸில் இருந்த ரூ.3,000 பணத்தை பறித்தார். லாரன்ஸ் பணம், மொபைல்போனை திரும்ப கேட்ட போது, மூவரும் கொலை மிரட்டல் விடுத்ததுடன் தகாத வார்த்தைகளால் திட்டினர். தொடர்ந்து மொபைல்போனை துாக்கி எறிந்து விட்டு தப்பினர். துடியலுார் போலீசார் விசாரிக்கின்றனர். அரசு அலுவலகத்தில் ஏ.சி.,க்கள் திருட்டு ரேஸ்கோர்ஸ் : மாவட்ட சுகாதார அலுவலகத்தில் மண்டல தடய அறிவியல் துறை ஆய்வகம் செயல்பட்டு வருகிறது. இதில் துணை இயக்குனராக பணிபுரிபவர் வேலாயுதம். இரு தினங்களுக்கு முன் அலுவலகம் சென்ற போது அங்கு பொருத்தப்பட்டிருந்த எட்டு ஏ.சி.,க்கள் மாயமாகியிருந்தன. மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர். விவசாய மோட்டார் திருட்டு சிங்காநல்லுார் : வெள்ளலுாரை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 55; விவசாயி. இவர் குத்தகைக்கு எடுத்த நிலத்தின் கிணற்றில் இருந்த மோட்டார் பம்ப்கள், 4, காப்பர் வயர்கள், மின்விசிறிகள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டிருந்தன. புகாரின் பேரில் சிங்காநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர். டைடல் பார்க்கில் மின்வயர்கள் திருட்டு ஹோப் காலேஜ் : பிச்சனுார் வீரப்பனுாரை சேர்ந்தவர் மணிகண்டன், 43; டைட்டல் பார்க்கில் பணிபுரிகிறார். அங்கு பணிபுரியும் அருப்புக்கோட்டை ராமசாமி நகரை சேர்ந்த சரவணன் பணிபுரிந்தார். இவர் நிறுவனத்தில் இருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான காப்பர் வயர்களை திருடியது தெரிந்தது. மணிகண்டன் புகாரின் பேரில் பீளமேடு போலீசார் சரவணனை தேடி வருகின்றனர். கஞ்சா விற்றவர் கைது ரேஸ்கோர்ஸ் : போலீசார் ரோந்து பணியின் போது ரயில்வே ஸ்டேஷன் முன், சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த நபரிடம் சோதனை நடத்தினர். அதில் அவர் கஞ்சா வைத்திருப்பது தெரிந்தது. அவர் அருப்புக்கோட்டையை சேர்ந்த சூர்யா என தெரிந்து கைது செய்தனர். புகையிலை விற்ற மூவர் கைது கவுண்டம்பாளையம்: போலீசாருக்கு வடவள்ளி ரோட்டில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலைப் பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் வந்தது. அங்கு புகையிலை பதுக்கி வைத்திருந்த இடையர்பாளையம் அன்பழகனை, 19 கைது செய்தனர். இதேபோல், சிங்காநல்லுார் போலீசார் உப்பிலிபாளையம் ஜான்கிரிஸ்டோபர், 33 என்பவரை கைது செய்தனர். சரவணம்பட்டி போலீசார் கணபதியில் தங்கியுள்ள திருச்சி பாலகிருஷ்ணாம்பதியை சேர்ந்த மோகன்ராஜ், 27 என்பவரை கைது செய்தனர். மூவரிடம் இருந்தும் 316 பாக்கெட்டுகள் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.